வியாழன், 4 பிப்ரவரி, 2010

சுட சுட அசல் விமர்சனம்



























எனது முந்தைய பதிவில் குறிப்பட்டது போலவெ அசல் பர்ஸ்ட் டேய் பர்ஸ்ட் ஷொ பார்தாச்சு.
எதிர்பார்த்ததை போலவெ பழி வாங்கும் கதைதான், ஆனால் கொடுத்த விதம் இன்ட்ரஸ்டிங்.

பிரான்சில ஜீவ நாதன் ஒரு பெரிய ஆயுத டீலர், கவர்ன்மென்ட்க்கு மட்டுமே ஆயுதம் சப்ளை செய்யும் அப்பா அஜித், அவரோட மூனு பசங்க சம்பத், பிராசத் அப்புறம் ஸ்டெப் சன் அஜித்.

ஆரம்பதிதிலிருன்ந்து அஜித்தை ஒதுக்கியெ வைக்கிறாங்க சம்பத்தும் பிரசாத்தும், அப்பா அஜித்துக்கு மகன் அஜித் மேலாதான் பாசம் அதிகம்.
தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் கும்பலுடன் டீல் செய்ய ஆசைப்படுகிறார்கள் சம்பத்தும் பிரசாத்தும், அதற்க்கு அப்பா அஜித் தடை சொல்ல மாமா மிலிந்த் துனையுடன் டீலா முடிக்க ஏற்கனவே டீல் செய்த மும்பையின் ஷெட்டி குரூப் பிரசாத்தை கடத்த மீட்க செல்கிறார் மகன் அஜித். அஜித் பிரசாத்தை மீட்ட பின்பு ஆரம்பிக்கறது திரைக்கதையின் வேகம்.
ஆக்சன் காட்சிகள் தூள் கிளப்புகிறன, சைனா பஜார் சண்டை காட்சிகள், ஷெட்டியொட மோதும் காட்சிகள் சூப்பர்.

அப்பாவாக வரும் அஜித் 15 நிமிடமேய் வந்தாலும் மனதில் நிற்கிறார். இதுக்கு வெறெய் யராவது நடிச்சிருக்கலாம்.

சமீரா ரெட்டியும், பாவனாவும் என்ன பன்றாங்னு நீங்க கேட்கிறது புரியுது.ஃப்ரான்ஸ் எம்பசியில வொர்க் பண்றாங்க சமீரா, அஜித்தொட ஒரு தலைக் காதல். படத்துல ஹீரொயின் என்னமோ பாவனாதான் நல்ல நடிப்பு, சமீராவொட துரு துருன்னு இருக்கிற கண்கள். வலைன்டைன்ஸ் டேய் காமடி பொறமையொட கேள்வி கேட்கிறதுல நல்ல எக்ஸ்ப்ரசன் பன்னிருக்காங்க.

டோட்டோயிங்க்.., யஷ்வந்த்தா பாடல் சூப்பர். ஜெம்ஸ் பான்ட் பாணியில் வரும் கற்றை நிறுத்தி கேளு ரசிக்கலாம். எங்கே எங்கே பாட்டு படத்த்லா இல்லையா இல்ல கட் பண்ணிட்டாங்க்லான்னு தெரியலை.

டான் சமோசவாக யூகி அடிக்கும் குத்து ரசிக்கலாம், ஷெட்டியொட ஆட்களை தான் தான் அடிச்சத சொல்லி ஷெட்டி முன்னடியெய் போய் நிற்பது சூப்பர் சீன். படம் ஃபுல்லா தல புரானம் பாடுவது கொஞ்சம் ஓவர்
ஃப்ரான்ஸ் போலீசாக வரும் சுரெஷ், மாலசியக வரும் பிரபு படத்தில் வந்து போகிறார்கள்.

படத்தில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட், கெரக்டர் எக்ஷ்பிளனஷன் இல்லாமல் கதையொட சொல்லி இருப்பது திரைக்கதையின் அருமை. கிளவர் ஸ்க்ரீன் ப்ளெ. பலம், ஆனால் ஒரெ காதபாத்திரங்லை சுற்றி வருவது, கொஞ்சம் திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்கிறது. மொத்தத்தில் இந்த ஆண்டின் முதல் ஹிட் படம் அஜித் ரசிர்களுக்கு விருந்து

7 கருத்துகள்:

  1. அசல் முதல் ஹிட் படமா?

    அப்ப தமிழ்ப்படம் ஹிட் இல்லையா?

    பதிலளிநீக்கு
  2. pogada neengalum unga reviewvum ajith fansukku mattum tha paa hit of the year

    பதிலளிநீக்கு
  3. padam supera irukku pa what
    a stylish
    race
    and speed
    padam start pannadhum threiyale mudinchadhum theriale whole movie thrilling pa

    பதிலளிநீக்கு